;
Athirady Tamil News

பயிற்சி மையத்தில் தீ விபத்து ; 15 மாணவர்கள் மரணம் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்

0

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பயிற்சி மையக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டபோது, ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர். மேலும், தப்பிப்பதற்காக சில மாணவர்கள் கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

பலர் வைத்தியசாலையில் சிகிச்சை
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தீயைக் கட்டுப்படுத்திய பின்னர், இடிபாடுகளுக்கு மத்தியில் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஒரு வணிகப் பகுதியில் அமைந்துள்ள இந்த மூன்று மாடிக் கட்டிடத்தில், பயிற்சி மையம் மட்டுமின்றி, ஒரு விளையாட்டு மையம், செல்லப்பிராணிகளுக்கான உபகரணக் கடை மற்றும் ஒரு விலங்கு மருத்துவமனை உள்ளிட்ட பல கடைகளும் இயங்கி வந்தன. கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியது.

மாணவர்கள் மற்றும் பிறர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கீழே குதிக்கும் காணொளிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு குதித்ததில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.