;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இராணுவ வீரருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இராணுவம்

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.எம் ராஜா ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் “சேவா வனிதா” திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கட்டப்படும் இந்த வீடானது , எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி கட்டி முடித்து கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வீட்டுக்கான அடிக்கல்லினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நாட்டி வைத்தார்.

நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ். மாவட்ட செயலர், யாழ் மாவட்ட கட்டளை தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், பொலிசார் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.