;
Athirady Tamil News

செல்லப்பிராணிகளின் கழிவுகள் ; வடை தயாரித்த கடைக்கு பூட்டு

0

மன்னாரில் வடை தயாரிப்பு நிலையம் ஒன்று சுகாதார விதிமுறைகளை மீறிச் செயல்பட்டமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளால் இன்று (23) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதார மீறல்கள் கண்டறியப்பட்டன.

கோழிகள், புறாக்கள் ,செல்லப்பிராணிகளின் கழிவுகள்
பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த ஆய்வின் போது, மனிதர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதல்லாத மற்றும் மிகவும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தமை உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு தயாரிக்கும் இடத்தில் அதிகளவில் ஈக்கள் காணப்பட்டதுடன், கழிவுநீர் முறையாக அகற்றப்படாமல் தேங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிகள், புறாக்கள் மற்றும் பிற செல்லப்பிராணிகளின் கழிவுகள் காணப்பட்ட அசுத்தமான சூழலில் உணவு தயாரிக்கப்பட்டிருந்ததோடு, உணவு தயாரிப்பு நிலையத்தின் ஒட்டுமொத்த சுகாதார நிலையும் மிகவும் மோசமாக இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதன் உரிமையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டிய அனைத்து குறைபாடுகளையும் முழுமையாக நிவர்த்தி செய்து, இடத்தை சுத்தப்படுத்தி, தேவையான அனுமதிகளை மீண்டும் பெற்ற பின்னரே நிலையத்தை மீள இயக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.