;
Athirady Tamil News

பாலியல் குற்றச்சாட்டு; ஜெஃப்ரி டொனால்ட்சனுக்கு சிறை

0

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தான் பலமுறை உத்தியோகபூர்வமாகப் பார்வையிட்ட வடக்கு அயர்லாந்தின் ‘மெகாபெரி சிறைச்சாலையில்’ , பாலியல் குற்றவாளியாகத் முன்னாள் அரசியல் தலைவர் ஜெஃப்ரி டொனால்ட்சன் தனது முதல் இரவைக் கழித்துள்ளார் .

பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட சிறுவர் மீதான தொடர் பாலியல் குற்றங்களுக்காக ஜெஃப்ரி டொனால்ட்சனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிறையில் கைதியாக அனுமதிக்கப்பட்ட அவரது முதல் இரவில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாதிருக்க அவர் பலத்த பாதுகாப்புடன் கூடிய தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.

வடக்கு அயர்லாந்தின் மிக முக்கிய விஐபி கைதியாக டொனால்ட்சன் சிறைக்குள் சென்றுள்ளதால், சக கைதிகளின் ஒட்டுமொத்தக் கவனமும் அவர் மீது திரும்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.