;
Athirady Tamil News

மகளின் லிவ் இன் வாழ்க்கை; தட்டிக்கேட்ட தாய், தந்தை , சகோதரியை கொலை செய்த இளம் பெண் ; சம்பவத்தால் ஷாக்

0

லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்த மகளை பெற்றோர் தட்டிக்கேட்டதால் தாய், தந்தை மற்றும் சகோதரியை இளம் பெண் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெங்களூருவை உலுக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள சாய் கிரீன் அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர்கள் சோம்சுந்தர் மற்றும் அவர் மனைவி முத்துலட்சுமி. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதில் மூத்த மகள் ஸ்வேதா பெற்றோரிடமிருந்து பிரிந்து கென்னத் என்பவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தார்.

மகளின் லிவ் இன் வாழ்க்கை
ஆனால் அந்த உறவுக்கு சோம்சுந்தரும், அவர் மனைவியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு ஸ்வேதா சுமார் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் கடன் குறித்து அவரது பெற்றோர் அடிக்கடி ஸ்வேதாவிடம் கேள்வி எழுப்பியதால், குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது. ஸ்வேதா தனது லிவ் இன் பார்ட்னருடன் தனது பெற்றோரை பார்க்க வந்தார். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் இருந்தார்.

அவருடன் ஸ்வேதா வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் முத்துலட்சுமியை ​​அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டார். உடனே ஸ்வேதாவும், கென்னத்தும் சேர்ந்து ரத்தக்கரையை கழுவினர். சிறிது நேரத்தில் இளைய சகோதரி சுப்ரியா வந்தார். அவரையும் இருவரும் சேர்ந்து அடித்து மற்றும் குத்திக்கொலை செய்தனர்.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் சோம்சுந்தர் வந்தார். அவரையும் இருவரும் சேர்ந்து தாக்கினர். உடனே சோம்சுந்தர் வீட்டிற்கு வெளியில் ஓடி வந்து உதவி கேட்டு கத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அவரும் இறந்து போனார்.

மூவரையும் கொலை செய்த ஸ்வேதாவும், கென்னத்தும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருக்கின்றனர். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந் நிலையில் தப்பியோடிய பெண்ணையும் அவருடன் சேர்ந்து வாழ்ந்த துணைவரையும் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். நிதிப் பிரச்சினைகள் மற்றும் உறவுமுறையில் ஏற்பட்ட மனக்கசப்புகளே இதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.