புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைப்பு.. (படங்கள்)
1977 ஆம் ஆண்டு மாணவர்களினால் அவ்வாண்டில் ஒன்றாக படித்து இப்போது மறைந்த அம்மாணவர்களின் நினைவாக அவ்வித்தியாலயத்தின் மாணவ,மாணவிகள் தமது குடிதண்ணீர் தேவைக்காக பயன்படுத்தும் குடிதண்ணீர் தாங்கி தளத்தையும் புதிப்பித்து வழங்கி உள்ளதுடன், புதிய தண்ணீர் தாங்கியும் வழங்கப்பட்டதுடன்
இன்றையதினம் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி.வனிதா அருட்செல்வன் தலைமையில் மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வாழ்த்துக்கள் பழைய மாணவர்களுக்கு..
இப்படியான முன்மாதிரியான திட்டங்களை மற்றைய அணி மாணவர்களும் மேற்கொள்வது சாலச்சிறந்தது என நம்புவோமாக
*நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்*
