;
Athirady Tamil News

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு

0

காலி கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்திற்கு அருகில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை போத்தல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து, குறித்த சடலத்தை ஆற்றுநீரிலிருந்து மீட்டெடுத்தனர்.

கான்கிரீட் தூண் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கால்கள்
மீட்கப்பட்ட நபரின் முகம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதுடன், அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், அந்த நபரின் கால்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கான்கிரீட் தூண் ஒன்றில் கட்டப்பட்டிருந்ததும் விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைகள் ,கால்கள்கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.