;
Athirady Tamil News

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

0

சாத்தூா்: சாத்தூா் அருகே மூா்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே துலக்கன்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சுப்புராஜ்(52) இவருக்கு செந்தமான பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் பெற்று மூா்த்தி நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கபட்டு ஆலையில் அதிக அளவில் வைக்கபட்டிருந்ததாகவும், மேலும் ஆலையில் பட்டாசு காயவைக்கபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை மாலையில் திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்புதுறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்ற நிலையில், ஆலையில் பட்டாசுகள் மேலும் அடுத்தடுத்து பயங்கர சத்ததுடன் வெடிக்க தொடங்கியது.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அலறியடுத்து ஒடினாா்கள்.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சுமாா் ஆலையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின.

ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் நல்வாய்ப்பாக பட்டாசு ஆலை வெடி விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ரசயான பொருள்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கூறப்படும் நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.