;
Athirady Tamil News

குளத்தில்  மூழ்கி   முதியவர்  மரணம்

0

குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மரணமடைந்த முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று(29) இச்சம்பவம் முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 63 வயது மதிக்கத்தக்க வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ராஜு என்பவரே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்பு குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து முதியவரின் சடலம் மீட்டு எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  

You might also like

Leave A Reply

Your email address will not be published.