;
Athirady Tamil News

வடக்கில் சினிமா பாடல்கள்,ஆடல்களுக்கு தடை

0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை

யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பக்தர்களின் வசதிக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்த நிலையில், சினிமா பாடல்கள், ஆடல், பாடல்கள் உட்பட ஐந்து கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.