;
Athirady Tamil News

யாழில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள்!

0

யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டன.

இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.