ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவா் நியமனம்
பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2024 அக்டோபரில், இஸ்ரேல் படைகளுடனான போரில் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பதிலாக, இவா் இப்பொறுப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆயுதங்களைக் கைவிடுமாறு சா்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கொள்கை ரீதியாக தீவிரப் போக்குடைய கலீல் அல்-ஹய்யாவின் நியமனம் ஹமாஸ் அமைப்பு தனது பிடிவாதமான போக்கைத் தொடரப் போவதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.