எல்நினோ வெப்பத்திலும் தளராத பசுமைப் பணி: புங்குடுதீவில் மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சும் ‘சூழகம்’!
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலடியிலிருந்து குறிச்சுகாடு சந்தி வரையிலும் மற்றும் ஆலடி கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய வளாகத்திலும் நடுகை செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் எல்நினோ கடும் வெப்பம் காரணமாக பாதிக்கப்படுகின்ற நிலையில் சூழகம் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ரூபாய் 10000 நிதியுதவியில் நீர் பாய்ச்சப்பட்டது.
சூழலியல் மேம்பாடு அமைவனம் -( Soozhagam – சூழகம் ) ஒருங்கிணைப்பில் புங்குடுதீவு பிரதான வீதியில் வனவள பரிபாலன திணைக்களத்தினரால் சுமார் 170 புங்கை மற்றும் நாவல் மரக்கன்றுகள் பாதுகாப்பு கூடுகள் அமைக்கப்பட்டு நடுகை செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் 2021 ல் கண்ணகை அம்மன் கோவிலருகில் 60 மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டு இன்று நிழல் தரு மரங்களாக சோலையாக காட்சியளிப்பதை அவதானிக்கலாம்.
