;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய உதவிப் பணிப்பாளர் கடமையேற்பு

0
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன், நேற்றைய தினம் (06.08.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, டித்வா புயல் அனர்த்தத்தின் போது சிறப்பாக கடமையாற்றிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் அலுவலர் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அரசாங்க அதிபர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்.
அதேவேளை, புதிதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன் அவர்களை வரவேற்று, புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், இதுவரை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரி.என். சூரியராஜா, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் உதவிப் பணிப்பாளராக கடமையேற்க்கவுள்ளார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.