;
Athirady Tamil News

கிளிநொச்சியில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; கதறும் உறவுகள்

0

உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.