;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார்.

இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.