திருகோணமலை தொடருந்தில் மோதி உயிரை மாய்த்த நபர்
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று( 4ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா தொடருந்து நிலையத்திற்கும் திருகோணமலை தொடருந்து நிலையத்திற்கு இடையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவராவர்.
இது விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.