;
Athirady Tamil News

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போதைப்பொருள் விற்பனை!

0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு ஊழியர்கள் மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைதான 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள், மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரு ஊழியர்களையும் உடனடியாக பணி இடைநீக்கம்

பொரளை – வானத்தமுல்ல பகுதியில் இருந்து போதைப்பொருட்களைப் பெற்று, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வெளிநபர்களுக்கு விற்பனை செய்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரு ஊழியர்களையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.