;
Athirady Tamil News

மன்னார் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம் ; வலையில் சிக்கிய 300 கிலோ மீன்

0

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.

சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.

இது வேகமாக நீந்தக்கூடிய, நீளமான மூக்கையுடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.

வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாகக் காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.