;
Athirady Tamil News

இரு நாட்டு கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகளை மெதடிஸ்த திருச்சபைகள் தீர்க்க வேண்டும்

0
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை நோக்கி, இரு நாடுகளிலும் உள்ள மெதடிஸ்த திருச்சபைகள் ஒன்றிணைந்து உரையாடி, எமது கடல் வளங்களையும், எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
பருத்தித்துறை கட்டைவேலி மெதடிஸ்த திருச்சபையின் கீழ் இயங்கும் “நேசகம்” திருப்பணி மையத்தை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் அருட்தந்தை கிங்சிலி வீரசிங்கவுடன் இணைந்து கடற்தொழில் அமைச்சர் மையத்தை திறந்து வைத்தனர்.

“நேசகம்” திருப்பணி மையத்தை திறந்து வைத்த பின்னர் கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

இம்மையத்தின் ஊடாக எமது இளைஞர்களுக்கு நவீன மீன்பிடி தொழில்நுட்பங்கள், GPS மற்றும் VMS பயன்பாடு, படகு இயந்திரப் பராமரிப்பு, மீன்பிடி வலை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இளைஞர்களுக்கு வெறுமனே உதவிகளை வழங்குவது மட்டுமல்ல, அவர்கள் தமது காலில் தாங்களே நிற்கக்கூடிய திறனையும் அறிவையும் வழங்குவதே நிலையான அபிவிருத்தி. அந்த வகையில் “நேசகம்” மையத்தின் செயற்பாடு வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.

கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காணாமல் போகும் படகுகளை விரைவாகக் கண்டறிவதற்கும் உதவும் VMS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியம்

அத்துடன், இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை நோக்கி, இரு நாடுகளிலும் உள்ள மெதடிஸ்த திருச்சபைகள் ஒன்றிணைந்து உரையாடி, எமது கடல் வளங்களையும், எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.