;
Athirady Tamil News

நாட்டில் 97000 க்கும் அதிகமானோருக்கு டெங்கு

0

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் டெங்கு நோய் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, செப்டம்பர் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மொத்த டெங்கு நோயாளர்களின் பதிவைக் கருத்திற்கொள்ளும்போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 20,742 ஆகும்.

இது தவிர, கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.