;
Athirady Tamil News

பருத்தித்துறை கொலை – பிரதான சந்தேகநபரும் கைது

0
யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ,துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் (வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு ஜெனிதன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர் . அதில் ஜெனிதன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த  நிலையில், பிரதான சந்தேகநபர் புதுக்குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , அங்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.