யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்துள்ளது.
தாளையடி புதுக்காட்டு வீதியில் மருதங்கேணி பாலத்தை அண்மித்த பகுதிகளில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ள நிலையில் , அவை அப்புறப்படுத்தபடாமல் இருப்பதனால் துர்நாற்றம் வீசுவதனால் , அவ்வீதி ஊடாக பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்
நிலவும் அதீத வெப்பம் காரணமாக நன்னீர் வற்று ஏற்பட்டு , நன்னீரில் உப்பின் செறிவு அதிகரித்தமையால் , மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை , கரையொதுங்கிய மீன்களை அப்புறப்படுத்த பருத்தித்துறை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். .