;
Athirady Tamil News

சீன அதிபர் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்; டிரம்ப் நேரில் வரவேற்பு

0

வாஷிங்டன்,

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற செப்டம்பர் 23-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ஆண்ட்ரூஸ் விமான படைத் தளத்தில் ஜின்பிங்கின் விமானம் தரையிறங்குகிறது. அப்போது, வழக்கத்திற்கு மாறாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஜி ஜின்பிங்கை வரவேற்க உள்ளார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை
இதனை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் இரு நாட்டு தலைவர்களும் செப்டம்பர் 24 அன்று விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில், வரிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டுப்பாடு, அரிய கனிமங்கள் மற்றும் இருநாட்டு வணிக உறவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

டிரம்பின் பேட்டி
இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் அளித்துள்ள பேட்டியில், “நானும் சீன அதிபரும் மிக சிறந்த நல்லுறவை பேணி வருகிறோம். இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

சீனா அமெரிக்காவிற்கு அதிக அளவில் சுங்க வரிகளை செலுத்தி வருகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த வரியை நான் 145 சதவீதம் வரை உயர்த்தியிருந்தேன். ஆனால், அது மிக அதிகமாக இருந்ததால் சீன பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அதைத் தொடர்ந்து நீட்டிக்க நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.