தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கண்டி – பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.