புங்குடுதீவில் புதர் மண்டி காணப்பட்ட நன்னீர் கிணறு மக்களின் பாவனைக்காக!!
புங்குடுதீவில் புதர் மண்டி காணப்பட்ட நன்னீர் கிணறு மக்களின் பாவனைக்காக!!
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் இராஜேஸ்வரி வித்தியாலயத்திற்கு முன்பாக
நீண்ட நாட்களாகப் பராமரிக்கப்படாமல், முட்பற்றைகள் அடர்த்தியாக வளர்ந்து பற்றைக்காடு போலக் காட்சியளித்த நன்னீர் கிணறு ஒன்று சூழலியல் மேம்பாட்டு அமைப்பினரால் ( சூழகம் ) ரூபாய் 40000 நிதிச்செலவில் முழுமையாக சுத்தமாக்கப்பட்டது.
அத்தோடு அருகில் காணப்படுகின்ற சிறிய குளமொன்றும் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
புங்குடுதீவு ஜே/25 கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ( J/25 RDS ) வேண்டுகோளுக்கிணங்க
சூழகம் அமைப்பின் உப செயலாளர் திரு. ராஜேந்திரம் கஜேந்திரன் 25000 ரூபாய், சூழகம் அமைப்பின் செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் 15000 ரூபாய் என்றவாறு வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் குறித்த சிரமதான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமசேவகர் ச. சிறீதரன் ( நிமால்), ஜே / 25 கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கருணாகரன் குணாளன், உப தலைவர் நா. சண்முகம், உறுப்பினர் இந்திரன் மற்றும் பல பொதுமக்களும் இப்பணியில் இணைந்துகொண்டனர்.
