;
Athirady Tamil News

நேபாள வெள்ளப் பேரிடர்: நீர்மின் திட்ட சுரங்கத்தில் மேலும் 6 உடல்கள் மீட்பு

0

நேபாளத்தில் கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பேரிடரில் முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1,410 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6,145 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 13 ஆயிரத்து 756-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடரில் மின் திட்டங்களின் சுரங்கங்களில் பணி யாற்றிய ஆயிரக்கணக்கானவர்களும் சிக்கிக் கொண்டனர். 3 சுரங்கங்களில் மீட்புப் பணி தொடர்ந்து நடக்கிறது. சிலிம் மற்றும் அப்பர் திரிசூலி-1 நீர் மின் திட்ட சுரங்கங்களில் 2 நாட்களுக்கு முன்பு 5 உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் நேற்று மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து 400 மீட்டர் பகுதியைத் தாண்டி தேடிய போது, கான்கிரீட் பணிக்காக அமைக்கப்பட்ட இரும்புக் கம்பி வலையில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன.நேபாள பொறியாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட தகவலில் 13 நீர்மின் திட்டங்களில் இன்னும் 898 பேரை காணவில்லை என்றும், அதில் அப்பர் திரிசூலி-1 திட்டத்தில் மட்டும் 575 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் கூறப் பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.