18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்
;
நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு விளையாட்டரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைத்தார். பின்னர் விளையாட்டு வீர வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் 18ஆவது மாகாண விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்ற மாகாண மட்டப் பெருவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாவட்டங்களுக்கான பரிசில்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விளையாட்டு விழாவின் தொடக்க நாளான இன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் மற்றும் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் க.ஏகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
Prev Post
புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்றே தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவிக்கலாமாம்
Next Post