யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு ஆமைகளையும் , ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபரையும் , பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள் இரண்டையும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்