;
Athirady Tamil News

புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்றே தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவிக்கலாமாம்

0

தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான் புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தினார்கள் என குற்றம் சாட்டி சாதனங்களை பொலிஸார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்

அதனை அடுத்து ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி சாதனத்திற்கான பொலிஸ் நிலையம் சென்றிருந்த வேளை , பொறுப்பதிகாரி இல்லை என திருப்பியனுப்பியுள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் பொலிஸ் சென்ற போதும் திருப்பி அனுப்பியுள்ளனர்

பொலிஸார் ஏற்பாட்டாளர்களை அலைக்கழித்ததை அடுத்து, அது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து , நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

அதனை அடுத்து , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு , ஒலிபெருக்கி சாதனம் பெறுவதற்கான அனுமதிக்காக பொலிஸ் நிலையத்தில் விண்ணப்பிக்க கூறியதுடன் , புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்ற பின்னரே அனுமதி வழங்குவதா ? இல்லையா என முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.