ஊவாபரணகம தபகொல்ல மலை வெடிப்பு; தாழ்ந்த பூமி
ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று தெரிவித்துள்ளது.
தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில் காணப்படுவதுடன், சில இடங்களில் பூமி 7 முதல் 8 அடி வரை ஆழத்திற்குத் தாழ்ந்து போயுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக காட்டை யாரோ தீயிட்டு எரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடன் இவ்வாறு அந்த விரிசல்கள் அதிகரித்து, மழை நீர் ஓடுவதால் பூமி தளரத் தொடங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ள தபகொல்ல மலையைச் சுற்றி வீடுகளோ அல்லது மனித குடியிருப்புகளோ இல்லை என்றும், அந்த மலையைச் சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் மிளகுச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.