கொழும்பில் நிலத்தடியில் சிக்கிய மர்மம் – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த நிலத்தடி இரவு விடுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலால் துறை அதிகாரிகளால் முன்தினம் இந்த விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொழும்பு கலால் சிறப்புப் பிரிவு அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொம்பனித்தெருவில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறுக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு இடம் போன்று வெளியிலிருந்து தோற்றமளிக்கும் வகையில் இந்த இரவு விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரவு விடுதி
அத்துடன், முறுக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரி ஒன்றை அகற்றியதன் பின்னரே அங்குள்ள நுழைவாயிலும் இரவு விடுதி கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்திற்கு தினசரி வருகை தரும் வாடிக்கையாளர்கள் குழுவொன்று இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு வெளிநாட்டு மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் அங்கு விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களையும் கலால் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த இரவு விடுதியானது எந்தவித அனுமதியுமின்றி நடத்தப்பட்டு வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.