தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு: நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் பலி
கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு – 3 பேர் பலி
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 4 நாட்களில் 3 நைஜீரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் தென் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நைஜீரிய அரசு, இனவெறி ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்களை தென் ஆப்பிரிக்கா தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.