உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் 26 வீடுகள் நிர்மாணிப்பு
உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் 26 வீடுகள் நிர்மாணிப்பு
நாடு பூராவும் உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் “தனக்கான ஒரு இடமும் அழகான வாழ்க்கையும்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் 26 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (05.10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் முதல் கட்டமாக வவுனியா நொச்சிமோட்டை, துவரங்குளத்தில் திருமதி வளர்மதி யோகேஸ்வரன் என்ற பயனாளிக்கு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் வீடு கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
