;
Athirady Tamil News

உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு ; கர்ப்பிணி பெண்ணை கொன்று நாத்தனார்கள் செய்த சம்பவம்

0

இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமணமாகி 7 மாதங்களான நிலையில் 6 மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், அந்தப் பெண் உணவு சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான மரணம்
சந்தேகத்திற்கிடமான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிசார், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாமியர் மற்றும் நாத்தனார் இணைந்து கொலை செய்ததும், பின்னர் இயற்கை மரணம் போல் நாடகமாடியதும் தெரியவந்தது.

விசாரணையில் குறித்த இரு பெண்களுக்கும் தவறான உறவு இருந்ததாகவும் நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்களை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டோம்.

இந்த நிலையில் சில ஆண் நண்பர்களுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்தோம். கொலை செய்யப்பட்ட பெண் திருமணமாகி எங்கள் வீட்டுக்கு வந்த பின்னர் எங்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர்.

இதனால் சம்பவத்தன்று அதிகாலை அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சந்தியாவை 6 பேரும் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.