;
Athirady Tamil News

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் இலங்கையர்களிடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

0

வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணப்பரிமாற்றங்கள் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பணப்பரிமாற்றம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணப் பரிமாற்றங்கள் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளன.

இருப்பினும், செப்டெம்பர் மாதத்தில், வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணப் பரிமாற்றங்கள் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளன.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணப் பரிமாற்றங்கள் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளன.

திடீர் மாற்றம்
இதன்படி, ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணப் பரிமாற்றங்கள் 6,865.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது கடந்த ஆண்டு (2025) இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 18.1 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து நாடு பெற்ற பணப் பரிமாற்றங்களின் அளவு 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.