ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அதிகாரிகள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்
;
இக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் பொறுப்பதிகாரிகள் சமூகமளிக்கவில்லை. அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனவே, அதிகாரிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது. தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத அதிகாரிகளுக்குப் பதிலாகப் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி ஒருவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
தூரப் பிரதேசங்களில் பணியாற்ற வேண்டியிருப்பதையோ அல்லது உயர் அதிகாரிகளுடன் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதையோ காரணமாகக் கொண்டு கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்க்க முடியாது