;
Athirady Tamil News

விமானத்தில் குழந்தை பெற்ற இலங்கைப்பெண்!

0

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை  பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே   குழந்தையைப் பிரசவித்துள்ளார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகக் குவைத்திற்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இன்று (19) அதிகாலை 2:52 க்கு குவைத் சிட்டி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்ட ‘அல் ஜசீரா’ விமானச் சேவைக்குச் சொந்தமான J9-551 ரக விமானத்தில் பயணித்தபோதே இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

விமானப் பயணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் விமானச் சேவை விதிகள் உள்ள நிலையில்,  பெண் தனது கர்ப்பிணி நிலையை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து மறைத்துப் பயணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.