;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை – ஜே.டி.வான்ஸ் ‘பகீர்’ அறிவிப்பு

0

வாஷிங்டன்,

வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் 2-வது முறையாக கடந்த 2025-ம் ஆண்டு பொறுப்பெற்றார். அவருடைய பதவிக்காலம் 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை ஜனாதிபதியாக ஒரு நபர் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்பது எழுதப்படாத மரபாக பின்பற்றப்படுகிறது.

இதனால் துணை ஜனாதிபதியும் இந்திய மாப்பிள்ளையுமான ஜே.டி.வான்ஸ் 2028-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜே.டி.வான்ஸ் பகீரங்கமாக அறிவித்துள்ளார். மிச்சிகனில் நடந்த தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவு தனக்கு இருந்தாலும், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. எனக்கு 4 சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுடன் நேரத்தை செலவிட விருப்பம் கொண்டுள்ளேன். மேலும் என் மனைவி உஷாவுக்கு அரசியல் களத்தில் பெரிய அளவில் விருப்பம் இல்லை.

குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த பெரிய முடிவை எடுத்துள்ளேன்” என்றார்.

எனினும் அவர், “பெரிய முடிவுகளை எடுப்பதில் தான் எப்போதும் தாமதம் செய்பவர்” என் றும் தெரிவித்தார். டிரம்ப் தன்னை தனது மிக முக்கியமான வாரிசு எனப் பகிரங்கமாக அடை யாளப்படுத்திய போதிலும், வான்ஸ் இத்தகைய கருத்தைக் கூறியுள்ளது அரசியல் வட்டாரத் தில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் இருந்து ஜே.டி.வான்ஸ் நேரடியாக விலகியுள்ளதால் குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளராக களம் இறக்கப்படு வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.