விரதத்தை முடிக்க மறுத்த மனைவி… பொலிசாரை அழைத்த கணவர்: ஒரு வித்தியாசமான வழக்கு
தன்னைக் கண்டபிறகும் தன் மனைவி விரதத்தை முடித்துக்கொள்ளாததால், கோபத்தில் பொலிசாரை அழைத்துள்ளார் ஒருவர்.
மேற்கு டெல்லியில், வெளிநாட்டிலிருந்து ஓராண்டுக்குப் பின் வீடு திரும்பியுள்ளார் ஒருவர்.
அவரது மனைவி விரதம் இருந்த நிலையில், தான் வீட்டுக்கு வந்த பிறகும் தன் மனைவி விரதத்தை முடிக்காததால், பொலிசாரை அழைத்துள்ளார் அந்த நபர்.
பொலிசாரை அழைத்த கணவர்
ஸ்ரீராம் காலனி என்னுமிடத்தில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு விரைந்த பொலிசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, பாரம்பரிய சடங்குகளை நிறைவேற்றியபின் அந்தப் பெண் விரத்தை முடித்துக்கொண்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆக, விரதத்தை முடிக்க மனைவி மறுத்ததால் கணவர் பொலிசாரை அழைத்தது ஒரு வேடிக்கை என்றால், அந்தப் பெண் விரதம் இருந்ததே தன் கணவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்னும் வேண்டுதலுக்காகத்தான் என்பதால், யாரை குற்றம் சொல்வது என்பது புரியவில்லை!