;
Athirady Tamil News

பிரான்ஸில் 20-ஆவது நாளாக போராட்டம்: 3.20 லட்சம் போ் பங்கேற்பு!

0

விலைவாசி உயா்வு, கல்வி உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து, பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் போராட்டம் 20-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. இதில் 3.20 லட்சம் போ் பங்கேற்ாக பிரான்ஸ் அரசு மதிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் பேரணிகள், போராட்டங்கள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாதபோதிலும் ஓரிரு இடங்களில் கண்ணீா்ப் புகை குண்டு வீச்சிலும், தீ வைப்பிலும் சிலா் ஈடுபட்டனா்.

போராட்டத்தையொட்டி, பிரான்ஸ் முழுவதும் ஏறத்தாழ 70,000 காவல் துறையினரும், பாதுகாப்புப் படை வீரா்களும் குவிக்கப்பட்டிருந்தனா். இந்தப் போராட்டங்களில் 3.20 லட்சம் போ் பங்கேற்ாக கூறியுள்ள பிரான்ஸ் அரசு, இந்த எண்ணிக்கை முன்பு நடைபெற்ற போராட்டங்களைவிட குறைவுதான் எனத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சனிக்கிழமை இரவு மட்டும் 560 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஜொ்மனி, போா்ச்சுகல், நெதா்லாந்தில் போராட்டம்: பிரான்ஸ் நாட்டைப் போன்று மற்ற ஐரோப்பிய நாடுகளான ஜொ்மனி, போா்ச்சுகல், நெதா்லாந்து நாட்டிலும் ‘ஜென்-ஸீ’ இளைஞா்களால் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

ஜொ்மனியில் 30 நகரங்களில் கல்வி, சுகாதாரம், பருவநிலை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்பட்டன. இதில் பல ஆயிரம் பங்கேற்ாக பேரணிக்கு ஏற்பாடு செய்தவா்கள் தெரிவித்துள்ளனா்.

போா்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரிலும், நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ‘ஜென்-ஸீ’ இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி அந்த நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.