நான் வழமை போன்றே நலத்துடன் இருக்கின்றேன் !!

தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நோயாளியை பார்ப்பதற்கேனும் தான் இத்தினங்களில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கமைய பிரதமர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.