“இது ராஜபக்ஷர்களின் நாடு அல்ல” !!

நாடு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். ராஜபக்ஷர்களின் குடும்பமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற நினைப்பை கைவிடவும், இது ராஜபக்ஷர்களின் நாடு அல்ல, இப்போது போது, தயவு செய்து, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் என்று, ஆளும் கட்சியில் இருந்து விலகி, சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.