;
Athirady Tamil News

“டானியல், அபிரா” திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

0

“டானியல், அபிரா” திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#########################

கனடாவில் இன்றைய நாளில் திருமண பந்தத்தில் இணையும் “டானியல் அபிரா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக கிராமமொன்றில் கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைச் சேர்ந்த கனடாவில் வசிப்பவர்களான அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் டானியல் அபிரா தம்பதிகளின் திருமண விருந்துபசார நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட திருமண மதிய விருந்துணவு நிகழ்வில் அநேக கிராம மக்கள், சிறுவர், சிறுமியர்கள் என பலரும் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்து வாழ்த்திச் சென்றனர்.

அதிகாலை வேளையிலே மழை பெய்யத் தொடங்கிய போதிலும் இடையிடையே வானம் இருட்டி விடாது மழை பெய்த போதிலும் “டானியல் அபிரா” திருமண விருந்துபசார நிகழ்வுக்கு பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.

டானியல் அபிரா தம்பதிகளின் திருமண நாளில் அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கபட்ட போது கிராம மக்களுக்கான திருமண விருந்துபசார நிகழ்வும் விசேடமாக ஒழுங்குபடுத்தி நடைமுறை படுத்தப்பட்டது.

இவ்வாறான நிகழ்வுகளை விரும்பி ஒழுங்குபடுத்தி, தாயக உறவுகளுக்கு பக்கபலமாக செயற்பட்டுவரும் கனடாவாழ் புங்கையூர் மைந்தனும், கனடா நம் தாயகம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரும், கனடா மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இணைப்பாளருமான “உதயன் அல்லது ராஜா என அழைக்கப்படும் திரு.குணராஜா உதயராஜா அவர்களின்” ஏற்பாட்டில் வழ்ங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் திருமாங்கல்ய பந்தத்தில் இணையும் புதுமணத் தம்பதிகளை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறது.. அதேவேளை திரு.திருமதி டானியல் அபிரா தம்பதிகளின், திருமண நாளினை முன்னிட்டு பல்வேறு சமூகப் பங்களிப்பு மூலமாக தாயக உறவுகளுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய கனடாவாழ் அமரர் முத்தையா குணராஜா அவர்களின் குடும்பத்திற்கும் நன்றியுடன் கூடியவாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

11.10.2021

கனடா “டானியல் அபிரா” திருமண நன்னாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.