;
Athirady Tamil News

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-3) -படங்கள் வீடியோ-

0

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-3) -படங்கள் வீடியோ-

மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -3
####################

தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், மாபெரும் மக்கள் சேனையான புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும், அதன் செயலதிபருமான மக்கள் போராட்டத்தின் மாபெரும் தளபதியான தோழர் முகுந்தன் என அறியப்பட்ட அமரர் கதிர்காமர உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தெட்டாவது பிறந்தநாள் நினைவு தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் பல்வேறு கிராமமட்ட பொது அமைப்புக்களின் இணைவில் “புலம்பெயர் புளொட் தோழர்கள்” சிலரின் நிதிப் பங்களிப்பில், எழுச்சிமிகு மக்கள் அலையில மிக விமர்சையாக கொண்டாடப்பட்டதன் முதலாவது பகுதியில்,

வவுனியா கற்குளம் படிவம் மூன்றில் விசேடமாக அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் பலநூற்றுக்கனக்கான மக்கள் பெரு வெள்ளத்தில் பல்வேறு கலை நடனம் மற்றும் நினைவுரைகளுடன் நிகழ்வில் பங்கேற்ற பாடசாலை மாணவ மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வயோதிபர்களுக்கான உலருணவுப் பொதிகளுடன் ஏனைய பங்குபற்றுனர்களுக்கு பயன்தரு நல்லினத் தென்னை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு அமரர் தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தெட்டாவது பிறந்ததினம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்களது மேற்பார்வையில் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளி கட்டமைப்பு, ஆலய பரிபாலன சபை மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றதும்

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பெருந்தலைவர் முன்னாள் அதிபர், சமாதான நீதவான், புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர், சமூக சேவையாளர் “புங்குடுதீவு மண்ணின் மைந்தரான” திரு.எஸ்.கே சண்முகலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், புளொட் அமைப்பின் மூத்த போராளியான தோழர்.ஜெஸ்மின் அக்கா எனும் திருமதி ஜெயபாலினி ஹென்றி பெரேரா, புளொட் தோழரான சுமனின் துணைவியாரான திருமதி.சுமன், மட்டக்களப்பு புளொட் சிரேஷ்ட தோழரான வெள்ளை எனும் திரு.கிருஷ்ணபிள்ளை விஜயேந்திரன், ரெலோ அமைப்பின் சார்பில் கற்குளம் பிரதேச தோழர்.ஜெகன், வவுனியா அகரம் பிரிண்டெர்ஸ் உரிமையாளரும் சிறந்த சமூகத் தொணடருமான திரு.சிவலிங்கம் தர்ஷன், மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம், கிராம அவிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.குமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பொருளாளரும், சிறந்த சமூக சேவையாளருமான செல்வி.ரம்மியா செல்வராஜா அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதும் நீங்கள் அறிந்ததே.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதுடன், விருந்தினர்களினால் மங்கள விளக்கேற்றப்பட்டு தேவார பாராயணம் பாடப்பட்டு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவருக்குமான ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு

முதலில் பிரதம விருந்தினரான திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்களினால் புளொட் செயலதிபரின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை சாத்தப்பட்டு ஆரம்பமாகிய நிகழ்வில் மரியாதை செலுத்தி பிரதம விருந்தினரின் உரையுடன் ஆரம்பமாகிய நிகழ்வில்,

நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை தோழர்.முகுந்தன் எனும் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி “அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி” தமது பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதலில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதும்.

நிகழ்வில், வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு.சுப்பையா ஜெகதீஸ்வரன் என்ற தோழர் சிவம், தோழர்.தமிழ், தோழர் பாதுகாப்பு எனும் திரு.மாயன் பெருமாள் (சமலங்குளம்), தோழர்.ரூபன் கூமாங்குளம், புளொட் அமைப்பின் மூத்த தோழரான பாரூக் அண்ணரின் மகனான திரு.சிம்சுபன், தோழர்.மோகனரூபன் (சமலங்குளம்), தோழர்.ஐயா சிதம்பரபுரம் போன்றோரும் நிகழ்வில் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொண்ட புளொட் முக்கியஸ்தர்களான தோழர்.ஸ்ரீ எனும் கோபு (கனடா), தோழர்.கோபி (அமெரிக்கா) ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே.

இந்நிகழ்வில் முதலாவது நிகழ்வாக விசேட அம்சமாக “புங்குடுதீவு மண்ணின் மைந்தரும்” மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரும், “தேசியத்தின் பால் அதிக ஈடுபாடு” கொண்டவரும், சமூக சேவையாளருமான கனடா வாழ் திரு குணராஜா உதயராஜா என்ற திரு.உதயன் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் “உமா கிராம வீட்டுத் தோட்டம்” எனும் நிகழ்வும், முதலாவதாக பிரதம விருந்தினர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் தலைமையில் விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதும்

“உமா கிராம வீட்டுத் தோட்டம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இதுக்குரிய மண்வெட்டிகள், பூவாளிகள், பூச்சிக் கொல்லி மருந்து வகைகள் அதுக்குரிய உபகரணங்கள், தோட்டத்துக்குரிய விதைகள் போன்றவற்றையும் வழங்கி வைக்கும் முதலாவது நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன், அதன் தொடர்ச்சியாக இன்றையதினமே முதலாவது “கிராம வீட்டுத் தோடடம்” அமைக்கும் பணி மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து எமது இரண்டாவது பகுதியில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்ற பின்னர், புலம்பெயர்ந்து வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் புளொட் செயலதிபரின் எழுபத்தெட்டாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, எழுபத்தெட்டு பெறுமதியான உலருணவுப் பொதிகளும், எழுபத்தெட்டு பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும், கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள், வழங்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து இன்றைய மூன்றாவது பகுதியில் சிறியோர், இளையோர் முதல் வயோதிபர்களினால் நடத்தப்பட்ட நாட்டிய நடனக் கலை நிகழ்வுகள், அதிலும் குறிப்பாக விசேட தேவைக்கு உட்பட்ட சிறுமி ஒருவரின், தாயார் விரும்பிக் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, சிறுமியின் நடனமும் அவரது கிராமத்தவர்களுடன் இணைந்து இடம்பெற்று அவரது தாயாரின் ஆனந்தக் கண்ணீருடன் விருந்தினர்கள் உட்பட அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

அதேபோல் கவிதை, பாடல், நாட்டியம் நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட சுமார் முன்னூறுக்கும் அதிகமான கிராம மக்களுக்கு விசேட மதியஉணவு குறைவின்றி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரதம, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டோருக்கும், கவிதை, பாடல், நாட்டியம், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் தந்தோருக்கும், ஒலி, ஒளிப்பதிவு நடத்தியோருக்கும், புளொட் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரில் நினைவுக் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கட்டது

மேற்படி நிகழ்வுக்கு லண்டன் தோழர்களான மணிவண்ணன், ஸ்கந்தா, லிவர்பூல் ரஞ்சன், தயா, நகுலன், நிரோஷன், மற்றும் கனடா தோழர்களான நிரஞ்சன், ஸ்ரீ எனும் கோபு, மற்றும் பிரான்ஸ் தோழர்களான மட்டக்களப்பு தயா, குறிஞ்சிக்குமரன், சார்லிரவி, தயாளன், நோர்வேத் தோழரான ராஜன், ஜெர்மானித் தோழரான யூட், ஆகியோருடன் சுவிஸ் தோழர்களான சித்தா, அசோக், பாபு, புவி, தேவண்ணர், ராசன், பிரபா, பேர்ண் சிவா, பேர்ண் தயா, குழந்தை, குணா, அன்ரன் எனும் லோகன், செல்வபாலன், சார்கன்ஸ்மோகன், மனோ, ரமணன், ரஞ்சன் ஆகியோருடன் பெயர் குறிப்பிட விரும்பாத சில தோழர்களும் நிதிப் பங்களிப்பு வழங்கி இருந்தனர்.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் உதவி வழங்கல்” திட்டமானது, இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு, தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு,

இன்றைய நாளில் ஜனன தினத்தை காணும் அமரர்.உமாமகேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வேண்டி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

18.02.2023

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-3) -வீடியோ-

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2) -வீடியோ-

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -வீடியோ-

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -படங்கள் வீடியோ-

“புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த, வரலாற்றில் ஒரு பகுதி… (படங்கள்)

“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்)

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2) -படங்கள் வீடியோ-

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.