;
Athirady Tamil News

சகல அரச நிறுவகங்களிலும் நாளை முதல் வழமையான சேவை!!

0

சகல அரச ஊழியர்களையும் நாளையில் இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக நிறுவகப் பிரதானிகளின் அங்கீகாரத்திற்கு அமைவாக இதுவரை அரச சேவையாளர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாளை முதல் வழமையான முறையில் பணி இடம்பெறுவதனால் சகல திணைக்களங்களிலும் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.

நாட்டின் வழமையான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அரசசேவையும் புத்தாண்டில் இருந்து வழமைப்போன்று இடம்பெற வேண்டும்.

கொவிட் தொற்றின் காரணமாக அரசசேவை ஊழியர்களுக்கு 2 வருட காலம் சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது.

தேவையின் அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்காக நிறுவக பிரதானிக்கு அதிகாரம் வழங்கும் நடைமுறை புத்தாண்டு தொடக்கம் இரத்து செய்யப்படுவதாக அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 

You might also like

Leave A Reply

Your email address will not be published.