;
Athirady Tamil News

இன்று முதல் கட்டணங்கள் அதிகரிப்பு!!

0

பஸ் கட்டண உயர்வு இன்று (05) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கட்டண அதிகரிப்புக்கு அமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.

எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, பஸ் உரிமையாளர்கள் சங்கம் பஸ் பயண கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைத்தன.

இதனையடுத்து, போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், பஸ் பயணக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.