குடும்பஸ்தரின் உயிரை பறித்த கால்வாய் ; தமிழர் பகுதியில் சம்பவம்
புல்மோட்டை பொலிஸ் பிரிவின் மகாசேனபுர பகுதியில் கால்வாயில் விழுந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலொங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு, சடலம் பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து புல்மோட்டை பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.