;
Athirady Tamil News

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் – போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு

0

யாழ்.சுன்னாகம் பகுதியில் 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போதை அடிமைகள் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மெஹமட் பிரிடவுஸ் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பாடசாலை மாணவர்களை, இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் பொலிஸார் பாடசாலை ஆரம்பிக்கும் – முடிவுறும் நேரங்களில் சிவில் உடையில் விசேட கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2025ஆம் ஆண்டின், இறுதி வரையான காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்கள் மூலம் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற அபராதம் விதிக்கப்பட்டதுடன் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.