முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் தாய் மொழியையே மறந்த சிறுவன்! என்ன நடந்தது?
நெதர்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் வழக்கமான முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நடந்துக்கொண்ட விதம் மருத்துவ உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த சிறுவன் என்ன செய்தார் என்று சிந்திக்கிக்கின்றீர்ளா?
கால்பந்து விளையாடும்போது கால் மூட்டுப்பகுதியில் அடிபட்டு, கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குறித்த சிறுவன் சிகிச்சைக்கு பின்னர் மயக்கநிலையிலிருந்து எழுந்ததும் தனக்கு கொஞ்சம் மட்டுமே தெரிந்த ஆங்கில மொழியில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு மிகவும் சரளமாக பேசியுள்ளார்.
மாணவரின் இந்த நடத்தையால் வியப்படைந்த செவிலியர்கள், சில நிமிடங்களில் அவர் இயல்புக்கு திரும்புவார் என நினைத்த போதும், அவர் தொடர்ந்தும் ஆங்கிலத்திலேயே வித்தியாசமாக பேசியுள்ளதுடன் தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
காரணம் என்ன?
ஆங்கிலத்தில் பேசுவதில் என்ன ஆச்சரியம் என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கும், ஆனால் குறித்த சிறுவனின் தாய் மொழி டச்சு. டச்சு மொழியில் சரளமாக பேசும் பழக்கமுடைய அச்சிறுவன், அறுவை சிகிச்சைக்கு பின் டச்சை முற்றிலுமாக மறந்துவிட்டார்.
இன்னும் சொல்லப்போனால் இவருக்கு தாதியர்கள் டச்சு மொழியில் பேசிய எதுவும் புரியவில்லையாம். மேலும் தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். இதனால் மருத்துவர்களிடம் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது தன் பெற்றோரை கூட அடையாளம் தெரியாமல் அவர் மறந்ததால், மருத்துவர்களே செய்வதறியாது திகைத்துப்போய்யுள்ளனர்.
மருத்துவ அறிக்கையின்படி, அவருக்கு முந்தைய மனநல வரலாறு மற்றும் தொடர்புடைய குடும்ப மருத்துவ வரலாறு எதுவும் இல்லை என்ற நிலையில், இதன் பின்னணியில் Foreign Language Syndrome என்ற மிகமிக அரிதான நோய் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மருத்துவ வரலாற்றில் இதுவரை 9 பேர் மட்டுமே இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த குறைபாடு இருப்போர், தங்களுக்கு குறைவாகவே தெரிந்த இரண்டாவது மொழியை முதன்மை மொழி போல சரளமாக பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.